You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து: உள்ளே சிக்கியுள்ள 40 தொழிலாளர்களின் கதி என்ன?
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சுரங்கப்பாதை இடிந்ததில் அங்கே பணிபுரிந்த 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளனர்.
சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுக்கு வெளியில் இருந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுடன் இன்னும் தொடர்பு ஏற்படவில்லை.
சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். ஜே.சி.பி மற்றும் பிற இயந்திரங்கள் மூலம் சுரங்கப்பாதைக்கு அருகில் உள்ள இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
சுரங்கப்பாதையில் சிக்கியவர்களைக் காப்பாற்ற 13 மீ அகல பாதையில் ஜே.சி.பி, பொக்லேன் இயந்திரங்கள் ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)