காணொளி: மகாராஷ்ட்ராவில் வாடிக்கையாளர் போல நுழைந்து செயினை பறித்த நபர்
காணொளி: மகாராஷ்ட்ராவில் வாடிக்கையாளர் போல நுழைந்து செயினை பறித்த நபர்
பிரசுரிக்கப்பட்டது
எச்சரிக்கை: காணொளி சங்கடம் தரலாம்
மகாராஷ்டிராவில் கடை ஒன்றில் பொருள் வாங்குவது போல நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டார்.
புனேவில் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த சிசிடிவி காட்சிகளை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த எம்பி சுப்ரியா சூலே, புனேவில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் சுலபமாக தப்பிவிடுவதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என விமர்சித்துள்ளார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



