காணொளி: பூனை போல 'மியாவ்' சத்தம் எழுப்பிய ஜாகுவார்

காணொளிக் குறிப்பு, பூனை போல 'மியாவ்' சத்தம் எழுப்பிய ஜாகுவார்
காணொளி: பூனை போல 'மியாவ்' சத்தம் எழுப்பிய ஜாகுவார்
பிரசுரிக்கப்பட்டது

ஜாகுவார் ஒன்று ‘மியாவ்’ என சத்தம் எழுப்புவதை விஞ்ஞானிகள் முதன்முறையாக பதிவு செய்துள்ளனர்.

தென்கிழக்கு பிரேசிலில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் வைக்கப்பட்டிருந்த கேமராவில் மூலம் இந்த ஆச்சரியமான நிகழ்வு பதிவாகியுள்ளது.

பெண் ஜாகுவார்கள் மற்றும் அவற்றின் குட்டிகள், வீட்டுப் பூனைகளைப் போல ‘மியாவ்’ என்று சத்தம் எழுப்புவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு முன்பு, சிங்கம் புலி போல ஜாகுவார்களும் கர்ஜனை மட்டுமே செய்யும் என நம்பப்பட்டு வந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு