இந்திய குடும்பங்களை வழிநடத்தும் பெண்கள் - ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் சாத்தியமானது எப்படி?

காணொளிக் குறிப்பு, இந்திய குடும்பங்களை வழிநடத்தும் பெண்கள்!
பிரசுரிக்கப்பட்டது

எந்த ஒரு ஆணாதிக்க சமூகத்திலும் குடும்பத்துக்குத் தேவையான பொருளீட்டும் இடத்திலும், முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்திலும் ஆண்களே முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், இந்தியாவில் குடும்பங்களுக்குத் தலைமைப் பொறுப்பேற்கும் நிலைக்கு அதிக எண்ணிக்கையில் பெண்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

கடந்த முப்பது ஆண்டுகளில், இந்தியாவில் பெண்களே தலைமைப்பொறுப்பை ஏற்று குடும்பங்களை வழிநடத்தும் விகிதம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ஆணாதிக்கம் சார்ந்த குடும்ப அமைப்பில், இது போல் வேலை தேடி இடம்பெயரும் குடும்பங்கள் தான் இந்த மாற்றத்திற்கு ஒரு பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளன- இந்த மாற்றத்துக்கு இடப்பெயர்ச்சியே காரணம் என்பதே உண்மை.

தயாரிப்பு - திவ்யா ஆர்யா

ஒளிப்பதிவு - பிரேம் பூமிநாதன்

ஷோபா தேவி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: