You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
2024: உலகம் முழுவதும் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்
உலகின் பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடந்தன. புத்தாண்டு கவுண் டவுன் முடிந்தவுடன் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள ஸ்கை டவரில், வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. மக்கள் ஆரவாரத்தோடு வாண வேடிக்கையை கண்டு ரசித்தனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுக பாலம் மற்றும் ஓபரா ஹவுசில் நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கை மெய் சிலிர்க்கும் வகையில் இருந்தது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக்கில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடத்தப்பட்டன.
இந்தியாவின் பிற நகரங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. பல நகரங்களின் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டை கொண்டாட மக்கள் குவிந்தனர்.
தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சாவ் பிரயா நதியை சுற்றிலும் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பிக் பென் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புகழ் பெற்றது. சரியாக கடிகாரத்தில் 12 மணி அடித்ததும் வாண வேடிக்கைகள் பிக் பென்னுக்கு மேலும் அழகூட்டியது. அங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
கோபா கெபனா கடற்கரையில் ஏறத்தாழ 20 லட்சம் மக்கள் பங்கேற்று புத்தாண்டை கொண்டாடினர்.
ஜப்பானில் பாரம்பரிய முறையில் மணி அடிக்கப்பட்டும், சீனாவில் வாண வேடிக்கை மற்றும் பலூன்களை பறக்க விட்டும் 2023 ஆம் ஆண்டிற்கு விடை கொடுத்துவிட்டு, புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். துபாயின் புகழ் பெற்ற புர்ஜ் கலீபாவிலும் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)