You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள்: 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி - காணொளி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அன்னியூர் சிவா பெற்றுக் கொண்டார். அப்போது அவருடன் ஜெகத்ரட்சகன் எம்.பி மற்றும் அமைச்சர் பொன்முடி இருந்தனர்.
மொத்தமாக அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் 1,24,053. பா.ம.க வேட்பாளர் அன்புமணி 56,296 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
நாம் தமிழர் கட்சியின் அபிநயா 10,602 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்துள்ளார்.
மேலதிகத் தகவல்கள் காணொளியில்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)