இறந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் கொடுத்ததா அரசு மருத்துவமனை? - என்ன சர்ச்சை? - காணொளி

இறந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் கொடுத்ததா அரசு மருத்துவமனை? - என்ன சர்ச்சை? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் மிக்ஜாம் புயலால் பெய்த மழையின் வெள்ளத்தால், ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காமல் வீட்டிலேயே பிரசவிக்கப்பட்டு இறந்த பச்சிளம் குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கியிருக்கிறது ஒரு அரசு மருத்துவமனை நிர்வாகம்.

இதனையடுத்து, கடையில் வெள்ளைத் துணியை வாங்கி, குழந்தையின் உடலின் மீது சுற்றி அடக்கம் செய்ய உதவியிருக்கிறார்கள் தன்னார்வலர்கள்.

இந்தச் சம்பவம், மருத்துவக் கட்டமைப்பில் பின் தங்கி இருப்பதகக் கருதப்படும் வட மாநிலங்களில் நிகழவில்லை.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஓர் குடும்பத்திற்கு நிகழ்ந்து இருக்கிறது.

இறந்த குழந்தையை அட்டைப் பெட்டியில் வைத்துக் கொடுத்த நிகழ்வு தொடர்பானப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவியது. அரசியல் தலைவர்கள் உட்பட அனைத்து தப்பினரும் அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)