11 குற்றவாளிகள் விடுதலை ரத்து - பில்கிஸ் பானுவின் சொந்த ஊர் எப்படி இருக்கிறது?
பில்கிஸ் பானு வழக்கில் குஜராத் அரசால் முன் கூட்டி விடுவிக்கப்பட்ட 11 பேரும் 2 வாரங்களுக்குள் சிறைக்குத் திரும்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2002 குஜராத் கலவரத்திற்குப் பிறகு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் தேவ்கத் பரியாவின் கபாடி பகுதிக்கு வந்து வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
குறைந்தது 74 வீடுகள் ரந்தீக்பூரைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பங்களுக்குச் சொந்தமானது. 2002 குஜராத் கலவரத்திற்கு முன்பு ரந்தீக்பூரில்தான் பில்கிஸ் பானுவும் வாழ்ந்து வந்தார்.
இங்கே உள்ள 45, 46 எண்களைக் கொண்ட வீடுகள் அருகே பில்கிஸ் பானு வழக்கில் இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான போது, பெரிதாக எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி காணப்பட்டது. பில்கிஸ் பானுவின் வீடு பல நாட்களாக பூட்டியே இருக்கிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் அங்கே என்ன நடந்தது? குற்றவாளிகளின் சொந்த ஊரான ரந்தீக்பூர் எப்படி இருந்தது?
முழு விவரம் காணொளியில்...

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



