You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தேர்தல் நடத்தை விதிகள் என்பது என்ன? மத்திய, மாநில அரசுகள் மற்றும் கட்சிகளுக்கு என்ன கட்டுப்பாடு?
18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக, ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பொது நடத்தை எப்படி இருக்க வேண்டும், தேர்தல் கூட்டங்கள் நடத்துவது, ஊர்வலம் செல்வது தொடர்பான விதிமுறைகள் என்ன, வாக்குப்பதிவு நாளில் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், வாக்குச் சாவடியில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு ஆளுங்கட்சியினர் எந்த விதமான அரசு அறிவிப்புகள், பதவியேற்பு, அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜை போன்ற நிகழ்ச்சிகளைச் செய்ய முடியாது என விதிமுறைகள் குறிப்பிடுகின்றன.
மேலும் என்னென்ன விதிமுறைகள் உள்ளன என்பதை இந்த காணொளியில் விரிவாக காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)