டைரனோசர்களின் முன்னோடி- ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த புதிய விலங்கு

காணொளிக் குறிப்பு, டைரனோசர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த புதிய வகை விலங்கு
டைரனோசர்களின் முன்னோடி- ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த புதிய விலங்கு
பிரசுரிக்கப்பட்டது

மங்கோலிய அருங்காட்சியகத்தின் சேகரிப்பில், ஒரு புதிய வகை டைனோசர்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை டைரனோசர்களின் (Tyrannosaurs) பரிணாம வரலாற்றை 'மாற்றி எழுதக்கூடியவை' என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஆராய்ச்சியாளர்கள், 86 மில்லியன் ஆண்டுகள் பழமையான இரண்டு எலும்புக்கூடுகளை பகுப்பாய்வு செய்தனர். அவை, டைரனோசர்களின் நெருங்கிய மூதாதையராகக் கருதப்படும் ஒரு உயிரினத்திலிருந்து வந்தவை என்ற தீர்மானத்துக்கு அவர்கள் வந்தனர். இது டி ரெக்ஸ் (T rex) எனும் பிரபல விலங்கையும் உள்ளடக்கிய ஒரு குழுவாகும்.

ஆராய்ச்சியாளர்கள் இந்த இனத்துக்கு கான்கூலூ மங்கோலியென்சிஸ் என்று பெயரிட்டனர், அதாவது மங்கோலியாவின் டிராகன் இளவரசன்.

நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, டைனோசர்களின் அழிவு காலம் வரை, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவை அச்சுறுத்திய சக்தி வாய்ந்த வேட்டை விலங்குகளாக டைரனோசர்கள் எவ்வாறு பரிணமித்தன என்பது பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது.

இந்த கண்டுபிடிப்பு பற்றிய பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் இந்த வீடியோவில்!

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு