You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பாகிஸ்தானை அதிகாலை 1.30 மணிக்கு மணிக்கு இந்தியா தாக்கியது ஏன்?
முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பான முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
பாகிஸ்தானைத் தாக்க இந்திய ராணுவம் அதிகாலை 1:00 மணி முதல் 1:30 மணி வரையிலான நேரத்தை ஏன் தேர்வு செய்தது என்பதை அவர் விளக்கினார்.
"மே 7 ஆம் தேதி, நாங்கள் தேர்ந்தெடுத்த பயங்கரவாதிகள் மறைவிடங்களை அதிகாலை 1:00 மணி முதல் 1:30 மணி வரை தாக்கினோம்" என்று ஜெனரல் அனில் சௌஹான் ராஞ்சியில் நடந்த ஒரு நிகழ்வில் கூறினார்.
அவர் கூறுகையில், "நாங்கள் ஏன் அதிகாலை 1:30 மணிக்கு தாக்குதல் நடத்தினோம்? அப்போது மிகவும் இருட்டாக இருக்கும். அந்த நேரத்தில் செயற்கைக்கோள் படங்களை எடுத்து ஆதாரங்களை சேகரிப்பது மிகவும் கடினம். எனினும், நாங்கள் அதிகாலை 1:00 மணி முதல் 1:30 மணிக்கு இடையில் தாக்குதல் நடத்தினோம்." என்றார்.
இந்த நேரத்தை தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்களை அவர் கூறினார். "எங்கள் திறன்களில் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. நாங்கள் இருட்டில் தாக்கினாலும், நாங்கள் புகைப்படங்களை எடுக்க முடியும்" என்றார்.
அவர் மேலும் பேசியது என்ன? முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு