You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லாஸ் ஏஞ்சலிஸ்: காட்டுத்தீயின் தற்போதைய நிலவரம் என்ன?
அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய கோரமான காட்டுத்தீயின் ஆறாவது நாள் இன்று. ஆனால் நிலைமை நீங்கள் காணொளியில் பார்ப்பது போலத்தான் இன்னும் உள்ளது.
பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. சமீபத்திய தகவலின்படி லாஸ் ஏஞ்சலிஸில் நான்கு காட்டுத்தீ எரிந்து வருகிறது.
இந்த எண்ணிக்கை நேற்று ஆறாக இருந்தது. காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. 13 பேரை காணவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். மேலம் நகர மேயர் கூற்றுப்படி, அந்த நகரம் அதன் கிழக்கு பகுதியில் மூன்றில் ஒரு பகுதியை இழந்துள்ளது.
தற்போது எரிந்து வருவதில் மிகப்பெரிய காட்டுத்தீயான பாலிசேட்ஸ் தீ, கிழக்கு நோக்கி பரவி வருகிறது, பாலிசேட்ஸ் தீ பரவுவதைத் தடுக்கும் முயற்சியில், தீயணைப்புப் படையினர் தீ தடுப்பு ரசாயண பொடிகளை தூவி வருகின்றனர். 23,654 ஏக்கர் பரப்பளவில் எரியும் பாலிசேட்ஸ் தீ இதுவரை 11% மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கலிஃபோர்னியா வனவியல் மற்றும் தீயணைப்புத்துறை கூறி உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)