மகாராஷ்டிரா: காட்டில் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருந்த அமெரிக்கப் பெண் - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, மகாராஷ்டிரா காட்டில் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருந்த அமெரிக்கப் பெண் - என்ன நடந்தது?
மகாராஷ்டிரா: காட்டில் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருந்த அமெரிக்கப் பெண் - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க வம்சாவளி பெண் ஒருவர் மஹாராஷ்டிராவின் சிந்தூர்க் பகுதியில் உள்ள கராடியின் காட்டுப் பகுதியில் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குத் தனது கணவரைக் குற்றம் சாட்டுகிறார் இந்தப் பெண். அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வந்ததாகவும், ஆதார் அட்டையில் தமிழ்நாடு முகவரி இருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

காட்டிற்குள் சில நாட்களாகக் கட்டிப் போடப்பட்டிருந்ததாக இவர் கூறுகிறார். ஆனால், எத்தனை நாட்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜூலை 27ஆம் தேதி கராடி காட்டிப் பகுதிக்குள் சென்ற உள்ளூர் விவசாயிகள் மற்றும் கால்நடை மேய்ப்பவர்கள் இவரின் அலறல் சத்தத்தைக் கேட்டுத் தேடியுள்ளனர்.

முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக கோவாவில் உள்ள பாம்போலிம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது

மகாராஷ்டிரா: காட்டில் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருந்த அமெரிக்கப் பெண் - என்ன நடந்தது?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்  ஃபேஸ்புக் ,  இன்ஸ்டாகிராம் ,  எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும்  யூட்யூப்  பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)