You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குழந்தைகளை குளிக்க வைத்து பாடம் சொல்லித் தரும் சிக்னல் பள்ளி
மும்பையில் தானே பகுதியில் பரபரப்பான மேம்பாலத்திற்கு கீழே ஷிப்பிங் கண்டெய்னர்களில் இயங்கிவருகிறது சிக்னல் பள்ளி. தெருக்களில் வசிக்கும் குழந்தைகளும், சிக்னல்களில் பொருட்கள் விற்பனை செய்யும் குழந்தைகளும் இந்தப் பள்ளியில் பயில்கின்றனர்.
இந்தியாவின் முதல் சிக்னல் பள்ளியான இந்தப் பள்ளியை, பாது சாவந்த் மற்றும் அவரது சக பணியாளர்கள் இணைந்து 2016ஆம் ஆண்டு தொடங்கினர். தினமும் காலையில் அருகே உள்ள சிக்னலில் இருந்து குழந்தைகளை ஒரு பேருந்து பள்ளிக்கு அழைத்துவரும். பள்ளியில் முதலில் அவர்கள் குளித்து தயாராகுவார்கள். காலை தொடங்கி இரவு உணவுவரை பள்ளியிலேயே உண்பார்கள். கல்வியோடு சேர்த்து விளையாட்டு, ரோபோட்டிக்ஸ் மற்றும் தொழிற்பயிற்சியும் இங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
கடந்த 8 ஆண்டுகளில் இந்தப் பள்ளியில் பயின்ற 7 குழந்தைகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர். 3 பேர் டிப்ளமோ தகுதியில் பொறியியல் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒருவர் போலீஸ் அகாடமியில் சேர்ந்துள்ளார்.
இது `சேஞ் மேக்கர்` என்ற பிபிசி சிறப்புத் தொடரின் ஐந்தாவது காணொளி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்