You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஸா மெட்ரோ: 500 கி.மீ. ஹமாஸ் சுரங்கப் பாதையில் என்ன இருக்கிறது? இஸ்ரேலுக்கு என்ன சவால்?
ஹமாஸ் குழுவை முற்றிலுமாக அழிக்க நினைக்கும் இஸ்ரேலுக்கு சவாலாக விளங்குவது, அக்குழுவினர் பூமிக்கடியில் அமைத்துள்ள ரகசிய சுரங்கப் பாதைகள்தான்.
இஸ்ரேலை தாக்க ஹமாஸ் பல்வேறு ரகசிய சுரங்கப் பாதைகளை அமைத்துள்ளது. ஹமாஸ் குழுவினர் தங்குவதற்காகவும் அவர்கள் சென்றுவரும் பாதையாக பயன்படுத்தவும் அக்குழுவினரால் ஏராளமான ரகசிய சுரங்கப் பாதைகள் பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ளன. தங்கள் திட்டங்களை வகுக்கவும் இந்த சுரங்கப் பாதைகளை ஹமாஸ் பயன்படுத்தி வருகிறது.
எல்லை தாண்டிய இந்த சுரங்கங்கள் வழியாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலை அடைய முடியும். சுரங்கங்களை பயன்படுத்தி பல்வேறு தாக்குதல்களையும் ஹமாஸ் நிகழ்த்தியுள்ளது.
ஹமாஸை பூமியிலிருந்து அழித்தொழிக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறுகிறது. அதற்கு முதலில் இந்த ரகசிய சுரங்கப் பாதைகளை இஸ்ரேல் அழிக்க வேண்டும். அது சாத்தியமா?
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)