ஆடல், பாடலுடன் உலக மக்கள் நடத்திய புத்தாண்டு கொண்டாட்டம்
ஆடல், பாடலுடன் உலக மக்கள் நடத்திய புத்தாண்டு கொண்டாட்டம்
பிரசுரிக்கப்பட்டது
பிரேசில் நாட்டில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில், அண்மையில் மறைந்த கால்பந்து மன்னன் பெலேவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வானவேடிக்கையில், கால்பந்து விளையாடுவதைப் போன்ற உருவம் விண்ணில் மின்னியது. லண்டனில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில், மறைந்த மாட்சிமை பொருந்திய ராணி இரண்டாம் எலிசபெத் நினைவுகூறப்பட்டார்.
வானில் ராணியின் க்ரீடம் போன்று வானவேடிக்கையில் ஒளிரவிடப்பட்டது. மேலும், யுக்ரேனுக்காகவும் குரல் கொடுக்கப்பட்டது. உலகைப் பாதுகாப்பது குறித்து அரசர் சார்ல்ஸின் குரல் பதிவு ஒன்று மக்கள் மத்தியில் ஒலிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



