காணொளி: ஹெலிகாப்டரில் சென்று கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா - காரணம் என்ன?

காணொளிக் குறிப்பு, எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க ராணுவம்
காணொளி: ஹெலிகாப்டரில் சென்று கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா - காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

வெனிசுவேலா அருகே எண்ணெய் கப்பல் ஒன்றை அமெரிக்க ராணுவம் கைப்பற்றியதாக அமெரிக்க நீதித் துறை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் ராணுவ ஹெலிகாப்டர்கள் கப்பலுக்கு அருகில் செல்வதும், அமெரிக்க படையினர் கப்பலில் ஏறுவது தெரிகிறது.

இந்த நடவடிக்கை அமெரிக்க கடலோர பாதுகாப்புப் படையால் நடத்தப்பட்டது என புதன்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

வீடியோவை ஆன்லைனில் பகிர்ந்த அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போன்டீ கூற்றுப்படி ''இந்த கப்பல் வெனிசுவேலா மற்றும் இரான் ஆகிய நாடுகளில் இருந்து தடை செய்யப்பட்ட எண்ணெயை கடத்த பயன்படுத்தப்பட்டது.''

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு