You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் கிராமத்து மருத்துவச்சிகளின் அதிர்ச்சியூட்டும் ஒப்புதல் வாக்குமூலம் - பிபிசி உலக சேவை ஆவணப்படம்
எச்சரிக்கை: இந்தக் காணொளியில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடிய காட்சிகள் இருக்கலாம்.
ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, வட இந்திய மாநிலமான பிகாரில் ஒரு பத்திரிகையாளர் கிராமத்து மருத்துவச்சிகளின் ஒரு குழுவை நேர்காணல் செய்தார். அவர்கள் ஓர் அதிர்ச்சிகரமான கதையைச் சொன்னார்கள். கேமராவின் முன் பேசிய இந்தப் பெண்கள், பெண் குழந்தைகளின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதன் பேரில் பச்சிளம் பெண் குழந்தைகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதுவரை யாரும் காணாத, இந்த அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்கள்- கிராமப்புற இந்தியாவில் சிசுக்கொலையின் கவலையளிக்கக் கூடிய வரலாற்றை ஆராயும் ஓர் ஆவணப்படத்தின் தொடக்கப் புள்ளியாகும்.
ஆனால் கொலைகளோடு படம் முடிந்துவிடவில்லை. இது பிறந்தவுடன் கொல்லப்படுவதிலிருந்து பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க இயக்கத்தைப் பற்றிய கதையாகும். கொலைகளைச் செய்த மருத்துவச்சிகளையே நம்பியிருந்தது அந்த இயக்கம்.
செய்தியாளர்- அமிதாப் பராஷர்
உதவி தயாரிப்பாளர்- பூர்ணிமா மேத்தா
தயாரிப்பாளர்- நேஹா தாரா மேத்தா
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)