You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் தற்போதைய நிலை என்ன? பிபிசி கள ஆய்வு - காணொளி
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னைக்குள் செயல்பட்டு வந்த பேருந்து நிலையத்தை கோயம்பேட்டில் இருந்து, சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றி சரியாக ஐந்து மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன.
பேருந்து நிலையம் துவங்கப்பட்டபோது, பயணிகளும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் பல்வேறு குறைகளைத் தெரிவித்தனர்.
பேருந்து நிலையத்தை வந்தடைய போதிய பேருந்துகள் இல்லாதது, எந்தப் பேருந்து எங்கே நிற்கும் என்ற தகவல்கள் இல்லாதது, போதிய உணவகங்கள், ஏடிஎம்கள், கடைகள் இல்லாதது என பயணிகள் பல குறைகளைத் தெரிவித்தனர்.
சென்னை நகருக்கென ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் இப்போது எப்படி இயங்குகிறது?
பயணிகளின் கருத்து என்ன?
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)