மதுரை: ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு யார் காரணம்? என்ன நடந்தது?

மதுரை: ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு யார் காரணம்? என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே சாமி தரிசனத்திற்காக வந்திருந்தோர் இருந்த ஒரு ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 8 பேர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். அவர்களில் இரண்டு பெண்கள், 4 ஆண்கள் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு ஆண்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக ரயிலில் கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகக் கூறிய ரயிலில் இருந்த பெண் பயணி ஒருவர், சில பயணிகள் சிலிண்டரை பற்ற வைத்து தேநீர் போட முயன்றபோது இந்த விபத்து நடந்ததாக தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: