திடீரென கொளுந்துவிட்டு எரிந்த கார், பதறி ஓடிய மக்கள் - என்ன நடந்தது?

திடீரென கொளுந்துவிட்டு எரிந்த கார், பதறி ஓடிய மக்கள் - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

கடந்த சனிக்கிழமை ராஜஸ்தானில் ஒரு வாகனம் நெருப்புப் பந்தாக மாறியது.

ஜெய்ப்பூரில் உயரமான ஒரு சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, ​​அதன் ஏசியில் இருந்து திடீரென புகை கிளம்பியதாக காரின் ஓட்டுநர் தெரிவித்தார்.

இதையடுத்து காரில் இருந்து ஓட்டுநர் கீழே இறங்கியதும் கார் மேலும் எரியத்தொடங்கியது.

சில நிமிடங்களுக்குப் பிறகு, காரின் ஹேண்ட் பிரேக் செயலிழந்த நிலையில் எரிந்துகொண்டிருந்த கார் திடீரென நகரத் தொடங்கியதால் சுற்றியிருந்த மக்கள் பதறி ஓடினர்.

மேலும் விவரங்கள் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)