சந்திரமுகி-2: வடிவேலுவின் நகைச்சுவை எப்படி இருந்தது?

சந்திரமுகி-2: வடிவேலுவின் நகைச்சுவை எப்படி இருந்தது?
பிரசுரிக்கப்பட்டது

"படத்திற்கு பெரிய பலம் வடிவேலுவின் நடிப்பு. தான் பயந்து ரசிகர்களுக்கு சிரிப்பை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக லாரன்சுடன் வடிவேலு பேசும் காட்சியில் தியேட்டரில் சிரிப்பு மழை" என மாலை மலர் புகழாரம் சூட்டியுள்ளது.

மேலும், "நாயகியாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத் அழகு தேவதையாக ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். சந்திரமுகியாக நடனம், பயம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

லட்சுமி மேனன் பாவமாகவும், சந்திரமுகி ஆத்மா புகுந்தவுடன் ஆக்ரோஷமான நடிப்பையும் வெளிப்படுத்தி அசர வைத்து இருக்கிறார்" எனவும் அது பாராட்டியுள்ளது.

சந்திரமுகி-2 பற்றி இந்தியா டுடே நாளிதழ் குறிப்பிடும்போது, ”ரஜினி காந்த், ஜோதிகா நடிப்பில் வெளிவந்த சந்திரமுகியில், வடிவேலுவின் காமெடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால், இதில் வடிவேலுவும் காமெடி பெரிதாக ஒன்றுமில்லை.

ரசிகர்கள் ஆங்காங்கே ரசிக்கும்படி அங்கொன்றும், இங்கொன்றும் மட்டுமே இருக்கிறது. வசனங்களும் ரசிக்கும்படியாக இல்லை" என்று தெரிவித்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)