ரஷ்யா - யுக்ரேன் போரை இந்தியாவால் நிறுத்த முடியுமா? புதின் - தோவல் சந்திப்பில் நடந்தது என்ன?
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை செப்டம்பர் 12-ஆம் தேதி அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சந்தித்தார்.
கடந்த இரண்டு மாதங்களில் பிரதமர் மோதி ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரு நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். இந்தச் சூழலில் தோவல்-புதின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் வீடியோவை ரஷ்ய செய்தி நிறுவனமான 'ஸ்புட்னிக்' சமூக ஊடகங்களில் வெளியிட்டது. ரஷ்யாவில் நடந்த அஜித் தோவல்-புதின் சந்திப்பு பல வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதற்கான காரணங்கள் என்ன? அங்கு என்ன பேசப்பட்டது?
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



