You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயம் ரவி 'அகிலன்' ஆக அசத்தினாரா? சொதப்பினாரா?
ஜெயம் ரவியை வைத்து 'பூலோகம்' படத்தை இயக்கியிருந்த என்.கல்யாண கிருஷ்ணன், மீண்டும் அவருடன் இணைந்துள்ள திரைப்படம்தான் 'அகிலன்'. ப்ரியா பவானிசங்கர், தன்யா ரவிச்சந்திரன், தருண் அரோரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு: விவேக் ஆனந்த், இசை: சாம் சி.எஸ். தனது முதல் படமான பூலோகத்தில் , வட சென்னையை கதைக்களமாகவும் குத்துச்சண்டையை கருப்பொருளாகவும் வைத்திருந்த இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன், இந்த படத்தில் துறைமுகம் மற்றும் அதை சுற்றி நிகழும் சம்பவங்களை திரைப்படமாக வடிவமைத்துள்ளார்.
'சர்வதேச சந்தையை கடல்வழி போக்குவரத்துதான் நிர்ணயம் செய்கிறது' என்று கடந்த வாரம் வெளியான அகிலன் திரைப்படத்தின் ட்ரெய்லரில் ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. எனவே, புதுவிதமான கதைக்களத்தை இப்படம் கொண்டிருக்கும் என்ற தோற்றம் ஏற்பட்டது.
இதேபோல், ஜெயம் ரவி நெகடிவ் ரோலில் நடிப்பதுபோன்ற தோற்றத்தையும் ட்ரெய்லர் ஏற்படுத்தியது. இதனால் அகிலன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்துள்ளதா? அகிலன் திரைப்படம் தொடர்பாக தற்போது ஊடகங்களில் விமர்சனம் வெளியாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்