திருமண நிச்சயதார்த்த நாளன்று பெண்ணை கடத்திய கும்பல்

திருமண நிச்சயதார்த்த நாளன்று பெண்ணை கடத்திய கும்பல்
பிரசுரிக்கப்பட்டது

ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான மன்னேகுடாவில் நடந்த சம்பவம் தான் இது.

இளம்பெண் ஒருவருக்கு, தனது வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.

அதற்கு சரியாக ஒரு மணி நேரத்திற்கு முன், சுமார் 100 பேர் கொண்ட கும்பல் அவ்வீட்டினுள் புகுந்து, அப்பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.

தடுக்க முயன்றவர்களை, அந்த கும்பல் தாக்கியதாகவும், வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, காவல்துறையினர் விசாரணையத் தொடங்கி, பெண்ணைத் தேடும் பணியை துரிதப்படுத்தினர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற தேடுதல் வேட்டைக்குப் பிறகு, இளம்பெண்ணை மீட்ட போலீசார், சிலரை கைதும் செய்தனர்.

ஆனால், முக்கிய குற்றவாளியான நவீன் ரெட்டி என்பவர் உட்பட பலர் தலைமறைவாக உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தன்னை காதலித்துவிட்டு, வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ள தயாராக இருந்ததால், அப்பெண்ணை நவீன் ரெட்டி என்பவர் கடத்தியதாக, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: