You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
3 வயதில் சைக்கிள் ஓட்டத் தொடங்கி 8 வயதில் சாம்பியன் - பிரிட்டனில் அசத்தும் சிறுவன்
ஹென்றி என்ற இந்த 8 வயதுச் சிறுவன் பிரிட்டனின் சைக்கிள் பந்தய சாம்பியன். இவர், 2024-ஆம் ஆண்டு தேசியப் போட்டியில் வென்றார். அவரது வயது பிரிவில், இரண்டு முறை பிரிட்டிஷ் சாம்பியன்ஷிப்பில் வென்றிருக்கிறார்.
‘BMX racing’ என்ற வகை சைக்கிள் போட்டியில் இவர் சாதனை படைத்து வரிகிறார்.
முதல் முறை போட்டியில் கலந்துகொண்டபோது அவருக்கு மூன்று வயது.
ஹென்றியின் பயிற்சியாளர் நீல் ஃபோர்சைத், “ஹென்றி கொஞ்சம் ஸ்பெஷல். மிகவும் வேகமாக சைக்கிள் ஓட்டுவார்,” என்கிறார்.
“அவரது வயதில் அவர்தான் உலகிலேயே வேகமானவர் என்று நினைக்கிறேன்,” எனவும் கூறுகிறார்.
ஹென்றியின் தந்தை மார்க், ஐரோப்பா, பிரிட்டன் என எங்கும் ஹென்றி
ஒரு போட்டியில்கூட தோற்றதில்லை, என்கிறார்.
ஹென்றியின் தாய் ஜோடி, தனது குழந்தை சாதிப்பதைக் காண்பது அற்புதமாக உள்ளது என்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)