குஜராத்: இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி உணவுப் பதிவர்

காணொளிக் குறிப்பு, குஜராத்தின் சூரத் நகரைச் சேந்த அங்கித் பரன்வால் ஒரு ஃபுட் விலாகர்.
குஜராத்: இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி உணவுப் பதிவர்
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தின் சூரத் நகரைச் சேந்த அங்கித் பரன்வால் ஒரு ஃபுட் விலாகர். சூரத் நகரத்தில் இருக்கும் உணவகங்கள், கஃபேடேரியாக்கள், ரெஸ்டாரண்டுகளுக்கு சென்று தன்னுடைய யூடியூப் சேனல் பார்வையாளர்களுக்காக சிறந்த மற்றும் புதிய உணவு வீடியோக்களைப் பதிவு செய்து வெளியிடுகிறார்.

“இந்தியாவின் முதல் மாற்றுத் திறனாளி ஃபுட் விலாகர் நான் தான் என்று நினைக்கிறேன். என்னால நடக்க, நகர முடியாது, ஆனாலும் இந்தத் துறையில் நுழைந்தேன். நான் இந்த தொழிலில் என்னால் முடிந்ததை செய்கிறேன்”, என்கிறார் அங்கித் பரன்வால்.

தொடர்ந்து உற்சாகமாக பேசும் அவர், “நான் சூரத்தில் பிஆர்டிஎஸ் திட்டத்தில் 18 மாதங்கள் வேலை செய்தேன். கொரோனா வந்த பிறகு, என் வேலையை இழந்தேன். வேலைக்காக பல இடங்களில் விண்ணப்பித்தேன், ஆனால் கிடைக்கவில்லை.

நான் ஒரு உணவுப் பைத்தியம், பலவகையான உணவுகளை ருசிக்க விரும்புவேன். இதற்கு முன்பாக, சில வெப் சீரிஸ்கள், குறும்படங்களை எடுத்துள்ளேன். நடக்க முடியாத ஒருவர் ஃபுட் வீலாகிங் செய்வது இதுவே முதல் முறை. மக்கள் எனது வீடியோக்களை விரும்பினார்கள், அவர்களால் நான் இன்று பிரபலமாகிவிட்டேன்.” என்கிறார் அங்கித்.

பிபிசியிடம் பேசிய அங்கித்தின் தாய் அன்னு பரன்வால், “அங்கித் பிறந்த போது அவனுக்கு முதுகில் புற்றுநோய் கட்டி இருந்தது. அங்கித் மூன்று மாத குழந்தையாக இருந்தபோது, ​​மருத்துவர்கள் அந்த கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்தனர். அங்கித் 1 வயதாக இருந்தபோதும், அவனது கால்களில் எந்த அசைவும் இல்லை.

நாங்கள் மருத்துவர்களைக் கலந்தாலோசித்தோம், ஆனால் அவர்களால் அங்கித்தின் நிலைமைக்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் இந்த விஷயங்களைச் செய்யத் தொடங்கிய போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். அவனுடைய பணி மற்றும் அர்ப்பணிப்புக்காக மக்கள் இன்று அவனைப் பாராட்டுகின்றனர்” என்று கூறினார்.

இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி ஃபுட் விலாகர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)