வெள்ளத்தில் மூழ்கிய சென்னை வேளச்சேரி - காணொளி

காணொளிக் குறிப்பு, உணவு, குடிதண்ணீர் இல்லை; மழை நின்றாலும் தவிப்பில் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) தொடங்கி நேற்று முழுதும் (டிசம்பர் 4) பெய்த பெரும் மழை காரணமாக நகரத்தில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின.

இதனால், மாநகர் முழுதும் போக்குவரத்துச் சேவைகள் ஸ்தம்பித்தன. பல இடங்களில் மின்சாரம் இல்லாமலும், தொலைதொடர்பு இணைப்புகள் இல்லாமலும் மக்கள் அவதிப்பட்டனர்.

பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் குடியிருப்பு வளாகங்களுக்குள்ளும் நீர் புகுந்ததாலும் மக்கள் சிரமத்திற்குள்ளாயினர்

வேளச்சேரியில் பிபிசி செய்தியாளர்கள் களத்திலிருந்து அளிக்கும் தகவல்களின்படி, பல இடங்களில் வீடுகளிலும் குடியிருப்பு வளாகங்களிலும் நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

வெள்ளம்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)