காணொளி: 25 வயதில் எம்எல்ஏ - யார் இந்த மைதிலி தாகூர்?

காணொளி: 25 வயதில் எம்எல்ஏ - யார் இந்த மைதிலி தாகூர்?
பிரசுரிக்கப்பட்டது

பிகாரின் இளம் சட்டப்பேரவை உறுப்பினர் மைதிலி தாக்கூர். பிகாரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட இவர் 84,915 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் 25 வயதான மைதிலி தாக்கூர் பிகாரின் இளம் சட்டப்பேரவை உறுப்பினராக அறியப்படுகிறார்.

மைதிலி, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் நன்கு அறியப்பட்ட முகமாக இருந்து வருகிறார். தனது இரண்டு சகோதரர்களுடன் சேர்ந்து யூடியூப்பில் பாடல் வீடியோக்களை பதிவேற்றி பிரபலமடைந்தார்.

மைதிலிக்கு, யூடியூபில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைப்பர்களும், இன்ஸ்டாகிராமில் 6.4 மில்லியன் ஃபாலோயர்களும் உள்ளனர். பிகாரின் மதுபனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், டெல்லியில் வளர்ந்தவர்.

சமூக வலைதளத்தில் பிரபலமான பிறகு, மைதிலி நாட்டுப்புறப் பாடல்கள், பக்தி பாடல்களில் பல ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் பிகாரின் பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் முன்னிலையில், கட்சியில் இணைந்தார்.

அப்போது பேசிய மைதிலி, பிரதமர் மோதியாலும் நிதிஷ் குமாராலும் ஈர்க்கப்பட்டதாக கூறினார். மேலும், தலைவராகும் எண்ணத்தில் கட்சியில் சேரவில்லை எனவும், சேவை செய்யவே கட்சியில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வெற்றிக்கு பிறகு பிபிசியிடம் பேசிய அவர், "மக்களின் அன்பால் இந்த வெற்றி சாத்தியமானது." எனக்கூறினார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு