'பிராண்ட் மோதி' ஆன நரேந்திர மோதி - பலம் என்ன? பலவீனம் என்ன?

'பிராண்ட் மோதி' ஆன நரேந்திர மோதி - பலம் என்ன? பலவீனம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. நரேந்திர மோதி தனது வலதுசாரி தேசியவாத பாரதிய ஜனதா கட்சியை இரண்டு தேர்தல்களிலும் வெற்றிகளுக்கு இட்டுச் சென்றிருக்கிறார். அவரை தொடர்ந்து வெற்றிக்கு இட்டுச் செல்வது எது? 'பிராண்ட் மோதி'யின் பலமும் பலவீனமும் என்னென்ன?

நரேந்திர மோதி, நண்பர்கள், எதிரிகள் என இருதரப்பிலும் தீவிரமான கருத்துகளைத் தூண்டினாலும்கூட அவர் மிகவும் பிரபலமான தலைவராக இருக்கிறார். எந்தத் தலைவருமே வெல்ல முடியாதவர் அல்ல என்றும் அரசியல் நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.

மோதியின் ஆதரவாளர்கள் அவர் ஒரு சிறந்த பேச்சாளர் என்று நம்புகிறார்கள். ஆனால், அவர் பெரிய நிகழ்வுகளைத் தனக்குச் சாதகமாகக் கையாள்வதாக அவரை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் மோதி ஒரு ஷோமேன் என்பதையும் கவர்ச்சிகரமான பேச்சாளர் என்பதையும் இருதரப்பும் ஏற்றுக் கொள்கின்றனர்.

மோதியின் ஆட்சியில், இந்தியாவின் பன்மைத்துவம் மீள முடியாமல் அழிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சுபவர்கள் சிலர் உள்ளனர். மற்றவர்கள் இது நீண்ட காலம் தாமதமாகியிருந்த நாட்டின் முக்கிய அடையாளத்தின் மறுமலர்ச்சி மற்றும் மறுவடிவமைப்பு எனக் கருதுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)