ஒடிஷா ரயில் விபத்து - 233 பேர் பலி: கோரமண்டல், ஹௌரா, சரக்கு ரயில்கள் மோதிய விபத்து எப்படி நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
ஒடிஷாவின் பாலசோர் மாவட்டம் அருகே 3 ரயில்கள் மோதிய பயங்கர ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. ஹவுரா-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதியது. அதன் பெட்டிகள் தடம் புரண்டு அருகேயுள்ள தண்டவாளத்தில் விழுந்தன. அவற்றில் மறுபுறம் வந்த யஸ்வந்த்பூர்-ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரயிலும் மோதியது.
ஒடிஷாவின் தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவத்தில் சுமார் 900 பேர் காயமடைந்துள்ளதாக அஞ்சப்படுகிறது.

பட மூலாதாரம், SUBRAT PATI
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்





















