கைகளை இழந்தாலும் கனவுகளை துரத்தும் ஸ்வப்னிகா

காணொளிக் குறிப்பு, கைகளை இழந்தாலும் கனவுகளை துரத்தும் ஸ்வப்னிகா
கைகளை இழந்தாலும் கனவுகளை துரத்தும் ஸ்வப்னிகா
பிரசுரிக்கப்பட்டது

கைகளை இழந்தாலும், தன்னம்பிக்கையை நெஞ்சில் ஏந்தி வாயால் ஓவியம் வரைந்து அசத்துகிறார், ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்த ஸ்வப்னிகா.

26 வயதான இவர், தனது வைரல் ரீல்ஸ் மூலமாக இப்போது சமூக ஊடக பிரபலமாக மாறியிருக்கிறார். சில நன்கொடையாளர்கள் செய்த உதவியுடன் சொந்தமாக தொழில் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

ஸ்வப்னிகா குழந்தையாக இருக்கும் போதே அவரது தந்தை இறந்துவிட்டார். தினக்கூலியான இவரின் தாய் மட்டுமே, மூன்று குழந்தைகளையும் வளர்த்துள்ளார். வேலைக்காக ஸ்வப்னிகாவின் தாய் ஐதராபாத்திற்கு சென்றிருந்த போது, கட்டுமான தளத்தில் விளையாடிக் கொண்டு இருந்த ஸ்வப்னிகாவை மின்சாரம் தாக்கியது.

இதனால் சிறுவயதிலேயே தனது இரு கைகளையும் அகற்ற வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

கல்லூரி படிப்பை முடித்தால் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அவரது நம்பிக்கை நிறைவேறவில்லை. ஆனால், தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் படத்தை வரைந்த பிறகு ஸ்வப்னிகாவின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. சில நாட்களிலேயே அவரது சமூக ஊடக கணக்குகளை ஆயிரக்கணக்கானோர் பின்பற்றத் தொடங்கினர்.

 தன்னம்பிக்கை, மாற்றுத்திறனாளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: