யூட்யூப் பார்த்து திருட முயற்சி - மடக்கிப்பிடித்த மக்கள்

காணொளிக் குறிப்பு, யூட்யூப் பார்த்து திருட முயற்சி - மடக்கிப்பிடித்த மக்கள்
யூட்யூப் பார்த்து திருட முயற்சி - மடக்கிப்பிடித்த மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

சேலம் மாவட்டம் ஆத்தூரில் யூட்யூப் பார்த்து நகைக்கடையில் திருட முயன்ற இருவரை பொதுமக்களே பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

ஆத்தூர் கடை வீதி பகுதியில் கடை மூடும் நேரத்தில் நகை வாங்குவது போல வந்த இருவர் கடையில் இருதவர்கள் மீது ரசாயனத்தை தெளித்து நகையை திருட முயன்றனர்.

அப்போது கடையில் இருந்தவர்கள் பொதுமக்கள் உதவியோடு இருவரையும் பிடித்தனர்.

அதில் ஒருவரிடம் இருந்து வெளிநாட்டுத் தயாரிப்பு துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்கள் மது அருந்த போதிய பணம் இல்லாததால் யூட்யூப் பார்த்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக காவல்துறை கூறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு