ஒரே வாகனம்.. தேவைக்கேற்ப அகலம் குறைக்கலாம், அதிகரிக்கலாம்

ஒரே வாகனம்.. தேவைக்கேற்ப அகலம் குறைக்கலாம், அதிகரிக்கலாம்
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவைச் சேர்ந்த சுதீர் என்ற இளைஞரின் புதுமையான யோசனையில் உதித்ததுதான் இந்த வாகனம்.

"நான் HR-ஆக உள்ளேன். நான் இன்ஜினியராக இல்லாவிட்டாலும் கூட இந்த வாகனத்தை நானே உருவாக்கினேன். பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் வேலை செய்த போது தினமும் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை எதிர்கொண்டேன். அப்போதுதான் தேவைக்கு ஏற்ப சுருங்கவும் விரியும்படியும் கார் இருந்தால் என்ன என்று எனக்கு யோசனை தோன்றியது. அப்படித்தான் இந்த காருக்கான யோசனை உருவானது" என்று சுதீர் சொல்கிறார்.

"'சாசிஸை விரிவுபடுத்துதல்' அடிப்படையில் வடிவத்தை மாற்றும் வாகனத்தை உருவாக்கினேன். உங்கள் தேவைக்கு ஏற்ப பைக் அல்லது காராக பயன்படுத்தலாம். இது 30Ah பேட்டரியால் இயக்கப்படும் மின்சார வாகனம், சுமார் 45 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும். இதனுள் பிரத்யேகமான பார்க்கிங் சென்சார் இருக்கும்" என்று அவர் கூறுகிறார்.

வாகனத்தின் அளவை நீட்டிக்க மற்றும் சுருக்க ஹைட்ராலிங் மெக்கானிசம் பயன்படுத்தப்படுகிறது. இதை உருவாக்க சுமார் 90 நாட்கள் மற்றும் இரண்டரை லட்ச ரூபாய் ஆனதாக சுதீர் கூறுகிறார்.

"போக்குவரத்துத் துறையின் அனுமதி, design approvals மற்றும் aerodynamic testing ஆகியவற்றைப் பெற்றவுடன், இந்த வாகனம் சாலைகளில் செல்ல முடியும். பொறியாளர்கள் இதை மேலும் மேம்படுத்தலாம். பொறியாளராக இல்லாமல் இந்தளவுக்கு நான் உருவாக்கி இருக்கிறேன்.எனவே பொறியாளர்கள் சரியான பொறியியல் நிபுணத்துவம் மற்றும் பாதுகாப்பு முறைகளுடன் இதை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு அதிகளவில் கிடைக்கச் செய்யலாம்" என்று சுதீர் சொல்கிறார்.

இந்த வாகனம் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளைப் பூர்த்திசெய்துள்ளதா அல்லது ஒப்புதலுக்கு ஏதேனும் மாற்றங்கள் தேவையா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு