தீப்பற்றிய வீட்டிலிருந்து குழந்தைகளை காப்பாற்றிய நபர்
தீப்பற்றிய வீட்டிலிருந்து குழந்தைகளை காப்பாற்றிய நபர்
பிரசுரிக்கப்பட்டது
பிரான்ஸின் பாரிஸில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ பற்றிய வீட்டில் இருந்து குழந்தைகளை பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றும் காட்சி வெளியாகி உள்ளது. குழந்தைகளின் தாயும் காப்பாற்றப்பட்டார்.
தீ விபத்தில் யாரும் தீவிரமாக காயமடையவில்லை. ஆனால் புகையை சுவாசித்ததற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



