You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: காஸாவில் மக்களுக்கு உதவும் கை, கால்கள் இல்லாத மாற்றுத்திறனாளி
காஸாவில் மக்களுக்கு உதவும் மாற்றுத் திறனாளி 29 வயது யூசெஃப் அமிரே பிறவியில் இருந்தே கை, கால் இல்லாதவர்.
"போர் என்னை கடுமையாக பாதித்துள்ளது. வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. என் எலெக்ட்ரிக் சக்கர நாற்காலியை இழந்தேன். லிஃப்ட் வசதியையும் இழந்துவிட்டேன். இப்போது படிக்கட்டுகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. முன்பு சுதந்திரமாக இருந்தேன், இப்போது ஒருவரை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது." என்கிறார் அவர்.
போர் தொடங்கி 7ம் நாள் இவரின் குடும்பத்தினர் இடம் பெயர்ந்தனர். 6 மாதங்களுக்கு பின் உணவு விநியோகிக்கும் அமைப்பை தொடங்கினார்.
IPC-யின்படி, காஸாவில் சுமார் 5 லட்சம் பேர் பட்டினியால் பாதித்துள்ளனர்.
"அரிசி, பருப்பு என எது இருக்கிறதோ வழங்குவோம். குறைந்தது 50 பேருக்கு நாங்கள் உணவளிக்கிறோம். போர், முற்றுகை காலத்தில் உணவுப் பொருட்களை பெறுவது மிகவும் கடினம்." என்கிறார்.
நன்கொடைகள் மூலம் உதவி தொடர்ந்தாலும் எதிர்காலம் குறித்து இவர் அஞ்சுகிறார்.
"போர் நீடித்து, எல்லை மூடப்பட்டால் நிலைமை மேலும் மோசமாகும். என் மகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவாளோ என அஞ்சுகிறேன். என்னைப் பற்றி அல்ல, குடும்பத்தைப் பற்றியே கவலை கொள்கிறேன்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு