You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி : தங்கத்தாலான கொழுக்கட்டை - கிலோ ரூ.12 ஆயிரம்
விநாயகர் சதுர்த்தியின் போது, தமிழ்நாட்டில் கொழுக்கட்டை எனும் இனிப்பு வகை செய்யப்படுவது வழக்கம். அதே விழாவின் போது வட இந்தியாவில் செய்யப்படும் கொழுக்கட்டையின் மற்றொரு வடிவம் மோதகம் என்று கூறலாம்.
இந்த மோதகத்தை சற்று வித்தியாசமாக 24 காரட் தங்க இழைகள் மற்றும் உயர் ரக பாதாம் கொண்டு குஜராத்தில் ஒருவர் தயாரித்துள்ளார். இதன் விலை கிலோ ரூ.12 ஆயிரம் ரூபாய் ஆகும்.
"இனிப்புகளை அலங்கரிக்க பொதுவாக வெள்ளி இழைகளையே பயன்படுத்துவோம். ஆனால், இந்த ஆண்டு தங்க இழைகளைப் பயன்படுத்தி மோடாக் தயாரிக்க முடிவுச் செய்தோம். இனிப்புகளை தயாரிக்க சான்றளிக்கப்பட்ட தங்க மற்றும் வெள்ளி இழைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன" என்று கடை உரிமையாளர் கிஷோர் சகாரியா கூறுகிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு