You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை நீர்த்தேக்கத்திலிருந்து பெருக்கெடுத்து ஓடிய நீர்
இது இலங்கையின் மஹியங்கனையில் உள்ள உமா ஓயா நீர்த்தேக்கத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.
இலங்கையில் திட்வா புயல் தாக்கத்தால் 56 பேர் பலியாகியுள்ளனர், 14 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 21 பேர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (நவம்பர் 27) புயலாக மாறியது. இதற்கு திட்வா (Ditwah) என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி இலங்கையில் கண்டி மற்றும் மதாலே மாவட்டங்களில் சில பகுதிகளில் 40 செ.மீக்கு அதிகமான மழை பதிவாகியுள்ளது. கம்மதுவா பகுதியில் 57.8 செ.மீ மழை பெய்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு