You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'எங்களுக்கு பயமாக இருக்கிறது' - நீடிக்கும் போர் குறித்து யுக்ரேன் இளம்பெண்கள் கூறுவது என்ன?
யுக்ரேனின் கீயவில் வசிக்கும் கரினா, "என் வாழ்க்கையை நினைத்து மிகவும் பயப்படுகிறேன். அதேநேரம் நான் அதை நேசிக்கிறேன். அம்மா, நான், தங்கை மூவரும் பிற குடும்பங்களின் ஆதரவில் வாழ்ந்து வருகிறோம். என் குடும்பத்தினரை தினமும் தொடர்புகொள்வது மிகவும் கடினமாக உள்ளது. ஆன்லைன் அழைப்பு மூலமாக மட்டுமே எங்களால் பேச முடிகிறது," என்று கூறினார்.
பிரிட்டனில் வசிக்கும் கேட்யா, "என் நாட்டை விட்டுச் செல்ல நான் விரும்பியதே இல்லை. அங்கேயே வாழ நினைத்தேன், அதற்கான திட்டங்களும் இருந்தன. போர் அனைத்தையும் மாற்றிவிட்டது. என் குடும்பத்தினரில் சிலர் போர்க்களத்தில் உள்ளனர், ஒவ்வொரு நாளும் அவர்களிடம் இருந்து வரும் தகவலுக்காகக் காத்திருக்கிறேன்," என்று தெரிவித்தார்.
இங்கு இரவில் ட்ரோன்களும், பகலில் ராக்கெட்டுகளும் பறக்கின்றன. இவை எங்கள் தினசரி வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டன என்று கூறுகின்றனர். முழு விபரமும் இந்த காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)