காணொளி: கொசஸ்தலை ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள் - காரணம் என்ன?
காணொளி: கொசஸ்தலை ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள் - காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
எண்ணூர் கழிமுகம் அருகே கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்ததற்கு தொழிற்சாலை கழிவுகள் காரணமாக இருக்கலாம் என்று குற்றம்சாட்டி அப்பகுதி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். திருவொற்றியூர் எம்.எல்.ஏ. செந்தில் குமாரும் நேரில் சென்று பார்வையிட்டார். இதுவரை பார்த்திடாத அளவுக்கு அதிக அளவில் மீன்கள் செத்து மிதக்க என்ன காரணம் என்பதை அதிகாரிகள் அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் விஷாந்த் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



