சிஎஸ்கேவில் அப்படி என்ன சிறப்பு? மற்ற அணிகளில் ஜொலிக்காத வீரர்கள் இங்கே பிரகாசிப்பது எப்படி?

சிஎஸ்கேவில் அப்படி என்ன சிறப்பு? மற்ற அணிகளில் ஜொலிக்காத வீரர்கள் இங்கே பிரகாசிப்பது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

ஐ.பி.எல். தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அஜிங்கியா ரஹானே ஆடிய ருத்ர தாண்டவம் கிரிக்கெட் ரசிகர்களின் கண்களில் இருந்து இன்னும் அகன்றிருக்காது. டெஸ்ட் வீரர் என்று முத்திரை குத்தப்பட்ட ரஹானேவின் சூறாவளி ஆட்டத்தை இன்னும் ரசிகர்கள் பலரால் நம்பவே முடியவில்லை. மெதுவாக ஆடுகிறார் என்று கூறி மற்ற அணிகளால் நிராகரிக்கப்பட்ட அவரை சென்னை அணி வாங்கி மேட்ச் வின்னராக மாற்றியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: