உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் இன்று அமைச்சராகப் பதவியேற்பு

காணொளிக் குறிப்பு, உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் இன்று அமைச்சராகப் பதவியேற்பு
உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் இன்று அமைச்சராகப் பதவியேற்பு
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடந்த பதவியேற்பு விழாவில் திமுகவைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பதவியேற்றார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 2021 தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டு வென்றார்.

இத்துடன் தமிழ்நாடு அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது . இத்துறை இதுவரை அமைச்சர் சி. வீ. மெய்யநாதனிடம் இருந்தது.

உதயநிதி ஸ்டாலின்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: