You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"திருடர்களை கட்சியில் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிப்பதாக கூறுவதா?" மோதி மீது கெஜ்ரிவால் சாடல்
அனைத்து திருடர்களையும் தன் கட்சியில் வைத்துக்கொண்டு பிரதமர் மோதி ஊழலை எதிர்ப்பதாக நாடகமாடுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் மார்ச் 21ம் தேதி முதல் 50 நாட்களுக்கும் மேல் சிறையில் இருந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
டெல்லி கன்னாட் பிளேசில் உள்ள ஹனுமன் மற்றும் நவகிரஹ மந்திர் கோயில்களில் மனைவி சுனிதா கேஜ்ரிவால் மற்றும் கட்சியினரோடு சாமி தரிசனம் செய்த பின்னர் ஆம் ஆத்மி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கக்கூடிய ஒரு சிறிய கட்சியான ஆம் ஆத்மியை பிரதமர் மோதி நசுக்கப் பார்ப்பதாக குற்றம் சாட்டினார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படலாம் என்று அவர் அச்சம் தெரிவித்தார்.
பிரதமர் மோதியை குறித்து விமர்சித்த கேஜ்ரிவால், "அனைத்து திருடர்களையும் தன் கட்சியில் வைத்துக்கொண்டு ஊழலை எதிர்ப்பதாகக் கூறும் பிரதமர் மோதி, அதனை எவ்வாறு செய்வது என்று என்னிடம் கற்றுக் கொள்ளலாம்" என்றார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 2-ம் தேதி அவர் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் மே 25-ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)