தாலிபன்களின் வெடிகுண்டு மிரட்டலை மீறி ஒலிம்பிக் கனவை நனவாக்கும் ஆப்கன் பிரேக் டான்சர்

தாலிபன்களின் வெடிகுண்டு மிரட்டலை மீறி ஒலிம்பிக் கனவை நனவாக்கும் ஆப்கன் பிரேக் டான்சர்
பிரசுரிக்கப்பட்டது

மனிஜா தலாஷ், தனது 17 வயதில், 2017ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானில் பிரேக் டான்ஸ் ஆடத் துவங்கினார்.

காபுல் நகரை தாலிபன் கைப்பற்றிய பிறகு, அவரது நடனக் குழு இருந்த கட்டடத்திற்கு வெகு அருகில் ஒரு குண்டு வெடித்தது. 'உயிர்மீது ஆசை இருந்தால் நடனக் குழுவை மூடுங்கள்,' என்று எச்சரிக்கை விடப்பட்டது.

அடிப்படை சுதந்திரம் ஒடுக்கப்பட்டது. பெண்கள் விளையாட்டுகள் தடைசெய்யப்பட்டன. அதனால் அங்கிருந்து, தனது குழுவினர் சிலருடன் தப்பி ஸ்பெயினுக்கு சென்றார்.

"நான் ஆப்கானிஸ்தானிலேயே தங்கியிருந்தால், இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன்," என்கிறார் மனிஜா.

மே மாதம் 2ஆம் தேதி, எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பிரேக் டான்ஸ் பிரிவில் கலந்துகொள்ள மனிஜா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

"ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்வதன் மூலம் ஆப்கன் பெண்கள் அடிபணிய மாட்டார்கள் என்று காட்ட விரும்புகிறேன்," என்கிறார் அவர்.

அவரது கதையைத் தெரிந்துகொள்ள காணொளியைப் பாருங்கள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)