பங்காரு அடிகளார் எப்படி இவ்வளவு செல்வாக்கு மிகுந்தவர் ஆனார்?
தற்போது காலமாகியிருக்கும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் பீடாதிபதியான பங்காரு அடிகளாருக்கு அஞ்சலிகள் குவிகின்றன.
பிரதமர் முதல் முதலமைச்சர் வரை இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் யார், ஏன் இவருக்கு இவ்வளவு செல்வாக்கு?
தலைநகர் சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 90 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்.
இந்தப் பீடத்தின் பீடாதிபதியான பங்காரு அடிகளார் வியாழக்கிழமையன்று காலமான நிலையில், செவ்வாடை அணிந்த பக்தர்களின் கூட்டம் அவரது உடலைப் பார்த்து இறுதி அஞ்சலி செலுத்த முட்டி மோதிக் கொண்டிருக்கிறது. இப்படிக் கதறி அழும் பக்தர்கள் கூட்டத்தில் ஆண்களும் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பதுதான் இந்த இடத்தை மற்ற ஆன்மீக தலங்களில் இருந்து வேறுபடுத்துகிறது.
பிற ஆன்மீகத் தலங்களில் பெண்களுக்குத் தரப்படாத முக்கியத்துவம், இங்கே பெண்களுக்குத் தரப்பட்டது. அதைச் செய்த அடிகளாரின் மரணம், பக்தர்களை உலுக்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசு பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என அறிவித்திருக்கிறது.
பிரதமர் முதல் முதலமைச்சர் வரை இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
பல தரப்பினராலும் மதிக்கப்பட்டும் வணங்கப்பட்டும் வந்த பங்காரு அடிகளார் யார்? இந்த பீடம் இவ்வளவு பெரியதானது எப்படி?
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



