சரிவை கண்ட அதானியின் பங்குச்சந்தை மதிப்பு - 'தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது' என ஹிண்டன்பர்க் அறிக்கை மீது குற்றச்சாட்டு
சரிவை கண்ட அதானியின் பங்குச்சந்தை மதிப்பு - 'தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது' என ஹிண்டன்பர்க் அறிக்கை மீது குற்றச்சாட்டு
பிரசுரிக்கப்பட்டது
ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மதிப்பு ரூ.88,000 கோடி சந்தை மதிப்பை இழந்தது. அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க்கின் அறிக்கை தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என்றும், ஒன்றைவிட்டு ஒன்றைக் காட்டும் தவறான தகவல்களைக் கொண்டது என்றும் அதானி குழுமம் கூறியுள்ளது.
கடந்த புதன்கிழமை ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், அதானி குழுமம், 88 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான சந்தை மதிப்பை இழந்தது. தற்போது, நியூயார்க்கில் செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதானி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



