யுக்ரேனை 500க்கும் மேற்பட்ட டிரோன்களை மூலம் தாக்கிய ரஷ்யா

காணொளிக் குறிப்பு, யுக்ரேன் மீது இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யா டிரோன் தாக்குதல்
யுக்ரேனை 500க்கும் மேற்பட்ட டிரோன்களை மூலம் தாக்கிய ரஷ்யா
பிரசுரிக்கப்பட்டது

கியவ் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 23 பேர் காயமடைந்தனர். எட்டு மணி நேரத்துக்கும் மேலாக சைரன் ஒலித்ததால் மக்கள் மெட்ரோ நிலையங்களில் தஞ்சம் புகுந்தனர்.

புதினுடன் பேசிய பிறகு, சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதில் "எந்த முன்னேற்றமும் இல்லை" என டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு சில மணி நேரங்களுக்குப் பின் இந்த தாக்குதல்கள் நடந்தன.

யுக்ரேனின் டிரோன் தொழிற்சாலைகள், ராணுவ தளங்களை குறிவைத்ததாக ரஷ்யா கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு