விசாரணைக்கு அழைத்து சென்ற குறவர் பெண்களிடம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதா ஆந்திர போலீஸ்?
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குறவர் இன பெண்களை ஆந்திர மாநில போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற சம்பவம் தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர்கள் மீது மனித அத்துமீறல் நிகழ்த்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக புகாரளித்த பெண்களிடம் பிபிசி சார்பில் பேசினோம்.

விசாரணைக்காக அழைத்து சென்றபோது தங்களை பெங்களூருவில் இரண்டு இடங்களில் தங்க வைத்தனர் என்றும் அதன் பின்னர் ஆந்திராவுக்கு அழைத்து சென்றனர் என்றும் அவர்கள் நம்மிடம் கூறினர். பெண் காவலர் முன்னிலையில் தங்களுக்கு வன்முறை நிகழ்ந்ததாக ஒரு பெண் கூறினார்.
5 நாட்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறியதாக கூறிய பெண் ஒருவர், தனக்கு மோசமான பாலியல் தாக்குதல் நடைபெற்றதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டார்.
தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



