You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தொலைந்துபோன மகள் திரும்பக் கிடைத்ததும் இந்த தந்தை என்ன செய்தார் தெரியுமா?
பதற்றமான அரசியல் சூழலால் பிரிந்திருந்த ஒரு தந்தையும் மகளும் ஒன்றிணையும் உருக்கமான காட்சி இது.
இவர்கள் அர்மேனிய (Armenia) இனத்தைச் சேர்ந்தவர்கள்.
சர்ச்சைக்குரிய ‘நகோர்னோ-கராபாக்ஹ்’ (Nagorno-Karabakh) பகுதியை அசர்பைஜான் (Azerbaijan) மீண்டும் தன் எல்லைக்குள் இணைத்துக்கொண்டபின் அங்கிருந்து அர்மேனியர்கள் வெளியேறினர்.
அப்போது இந்தக் குடும்பம் பிரிந்தது.
இதுவரை பல பத்தாயிரம் மக்கள் எல்லையைக் கடந்து அர்மேனியா சென்றிருக்கின்றனர்.
Satellite படங்கள், அர்மேனியாவுக்குச் செல்லக் காத்திருக்கும் வாகனங்களின் நீண்ட வரிசைகளைக் காட்டுகின்றன.
கடந்த 30 வருடங்களாக, நகோர்னோ-கராபாக் பகுதியை அர்மேனிய இன மக்கள் நிர்வகித்து வந்தனர். ஆனால், சர்வதேச அளவில், அப்பகுதி அசர்பைஜானைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)