You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கத்தார் - ஹமாஸ் இடையே நெருக்கம் ஏற்பட்டது எப்படி? அதன் பின்னணி என்ன?
அக்டோபர் 7ஆம் தேதி காலை, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் எல்லையைத் தாக்கி அதனுள் நுழைந்து 1400 பேரைக் கொன்றனர். அதன் பிறகு இஸ்ரேல் இந்தக் கொடூரமான தாக்குதலில் இருந்து மீள முயன்று வருகிறது.
காஸாவில் சுமார் 23 லட்சம் பாலத்தீனர்கள் வாழ்கின்றனர், 2007 முதல் ஹமாஸ் இங்கு ஆட்சி செய்து வருகிறது. காஸாவில் கடந்த இரண்டு வாரங்களாக 24 மணிநேரமும் இஸ்ரேலிய படைகள் குண்டுகளை வீசி வருகின்றன.
காஸாவில் உள்ள ஹமாஸ் அரசின் சுகாதார அமைச்சகத்தின்படி, இதுவரை 7,000க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது.
எனினும் ஹமாஸை வேரோடு அழித்த பிறகுதான் தாக்குதலை நிறுத்துவோம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் இரு தரப்புக்கும் இடையில் சமரசம் பேச ஒரு மத்தியஸ்தரின் தேவை ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)